×

கொரோனா தொற்று குணமடைந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தாமோதரன் மரணம்

கோவை: கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சாபாளையத்தை சேர்ந்தவர் பா.வெ.தாமோதரன் (71). அதிமுகவை சேர்ந்த இவர், கடந்த 2001-2006ல் பொங்கலூர் தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்று,  பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தற்போது, எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக இருந்தார். இவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 15ம் தேதி கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களில் நடந்த கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. இருப்பினும், மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், நுரையீரல் பாதிப்பினால் அவர் நேற்று மாலை உயிரிழந்தார். கடந்த மாதம் அவினாசி ரோடு மேம்பாலம் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார். இதுவே, அவர் கடைசியாக பங்கேற்ற விழா ஆகும். மறைந்த தாமோதரனுக்கு விஜயம் என்ற மனைவியும், கவிதா, ராதிகா என்ற 2 மகள்களும் உள்ளனர். இவரது ஒரே மகன், சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் மரணம் அடைந்து விட்டார்.

Tags : Damodaran ,AIADMK , Corona, Atimugha, Damodaran, death
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது