கர்நாடக சிறையிலிருந்து 27ம் தேதி விடுதலையானதும் சசிகலா ஓசூரில் தங்க ஏற்பாடு

ஓசூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, வரும் 27ம் தேதி விடுதலையாகிறார். இந்த தகவலை கர்நாடக மாநில சிறைத்துறை கூறியுள்ளது. தீர்ப்பில் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை கடந்த மாதம் சசிகலா செலுத்தினார். இதையடுத்து வரும் 27ம் தேதி சசிகலா விடுதலையாவது உறுதியாகியுள்ளது. விடுதலையானதும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கர்நாடக-தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடியில் அமமுகவினர் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், சிறையிலிருந்து அவர் ஓசூருக்கு வர இரவு நேரம் ஆகிவிடும் என்பதால் சென்னைக்கு இரவிலேயே பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்பதற்காக சசிகலாவை ஓசூரில் தங்க வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. ஓசூர் அல்லது சூளகிரியில் உள்ள ஸ்டார் ஓட்டலில் அவர் தங்க வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஓசூரில் 27ம் தேதி தங்கிவிட்டு, மறுநாள் 28ம் தேதி காலை கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக சசிகலா சென்னை செல்ல உள்ளார் என்றும், அவருக்கு வழிநெடுகிலும் சுமார் 50 இடங்களில் வரவேற்பு அளிக்க அமமுகவினர் ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories:

>