×

சிவகங்கையில் லேப்டாப் கோரி அமைச்சரை முற்றுகையிட முயன்ற மாணவர்கள்

சிவகங்கை:  சிவகங்கை மாவட்டத்தில் 2017-18ல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு இதுவரை இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை. இதை கண்டித்தும், உடனடியாக வழங்கக் கோரியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று காலை சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடந்தது. 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அமைச்சர் பாஸ்கரன் வெளியே வந்தார்.

நுழைவாயில் அருகே நின்ற மாணவர்கள், அமைச்சரின் காரை திடீரென முற்றுகையிட முயன்றனர். இதை பார்த்த போலீசார் அவர்களை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அமைச்சரை அனுப்பி வைத்தனர்.

Tags : minister ,Sivagangai , In Sivagangai, students, ministers, besiege, demanding laptop
× RELATED முதல்வர் பிரசாரத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் அமைச்சர் அறிக்கை