திரையரங்குகளில் விரைவில் தட்கல் டிக்கெட் அமல்: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று அளித்த பேட்டி: கொரோனா காலத்தையொட்டி திரையரங்குகள் இயங்காமல் இருந்தபோது எந்த வரியும் விதிக்கப்படவில்லை. கேளிக்கை வரியை ரத்து செய்வது குறித்த திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்துக்கு கூடுதல் காட்சிகளுக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முறைப்படுத்தப்பட்ட கட்டணம் தான் வாங்க வேண்டும் என்பது அரசின் விதி. அதை மீறி வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். திரையரங்குகளில் தட்கல் டிக்கெட் வழங்கும் முறை செயல்படுத்துவது தொடர்பாக, 3 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். தட்கல் டிக்கெட் எவ்வளவு நிர்ணயம் செய்யலாம் என திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்திடமும் கேட்டுள்ளோம். கூடிய விரைவில் தட்கல் டிக்கெட் முறை அமல்படுத்தப்படும் என்றார்.

Related Stories: