அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட ராகுல் காந்தி நாளை மதுரை வருகை

மதுரை: மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் பொங்கல் திருநாளான நாளை (ஜன. 14) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டை காண்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ராகுல் காந்தி நாளை (வியாழன்) மதுரை வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பகல் 12 மணிக்கு மதுரை வரும் அவர், அங்கிருந்து காரில் அவனியாபுரம் செல்கிறார். அவர் செல்லும் வழியெங்கும் மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மூன்று இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

 வரவேற்பை பெற்றுக் கொள்ளும் ராகுல்காந்தி, அவனியாபுரம் சென்று அங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்வையிடுகிறார். அங்கு சுமார் 2 மணி நேரம் அவர் ஜல்லிக்கட்டை ரசிக்கிறார். தொடர்ந்து மாலை 4 மணியளவில் மதுரை விமான நிலையம் வரும் ராகுல் காந்தி, அங்கிருந்து தனி விமானம் மூலம் மீண்டும் டெல்லி செல்கிறார்.

Related Stories:

>