×

சன் டிவி மைக்கை தூக்கி வீசிய அமைச்சர் மக்கள் அவர்களை தூக்கி வீசும் காலம் நெருங்கிவிட்டது: மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சென்னை: ஊடகத்தினர் மைக்கை தூக்கி வீசிய அமைச்சரையும், அவரது அமைச்சரவையையும் மக்கள் தூக்கி வீசும் காலம் நெருங்கி விட்டது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை பத்திரிகையாளர் சந்திப்பின் போது சன் டி.வி. மைக்கைத் தூக்கி வீசியிருக்கிறார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

அவரையும் அவரது அமைச்சரவையையும் மக்கள் தூக்கி வீசும் காலம் நெருங்கி வருகிறது. ஊடகங்களை மிரட்டுவதும், அவர்களது செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அதிகார மமதையில் செயல்படுவதும் அதிமுக அமைச்சர்களுக்கு வழக்கமானதுதான். மக்கள் இதனைக் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள் என்று மட்டும் நினைக்க வேண்டாம். அவர்களது எதிர்வினை தேர்தலில் எதிரொலிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதை வரவேற்கிறேன். இது இந்தியா முழுவதும் போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி. அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முனைப்புக்காட்ட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : minister ,Sun TV ,MK Stalin , Sun TV, Mike, Minister People, Throw, MK Stalin
× RELATED நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு...