×

கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் 15 முதல் 17ம் தேதி வரை மெரினா, வண்டலூர், கிண்டி பூங்கா, மாமல்லபுரம் சுற்றுலா செல்ல தடை: தமிழக அரசு திடீர் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில், மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று  மட்டும் (16ம் தேதி) பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என  ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அண்ணா உயிரியியல் பூங்கா, மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள கிண்டி தேசிய பூங்காவிலும் மற்றும் மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கையாக இதனை தடுக்கும் வகையில், மேற்கண்ட அனைத்து இடங்களிலும் 15.1.21, 16.1.21 மற்றும் 17.1.21 ஆகிய விடுமுறை நாட்களில் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Marina ,Vandalur ,Kindi Park ,Mamallapuram ,Government of Tamil Nadu , Corona, Risk, Marina, Vandalur, Kindi Park,, Prohibition
× RELATED வண்டலூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலி