×

போதை பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் மகன் சென்னையில் கைது

பெங்களூரு: கன்னட திரையுலக போதை பொருள் மாபியா கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் மகன் ஆதித்யா ஆல்வாவை 3 மாதங்களுக்கு பின்னர் மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த கன்னட திரையுலக போதை பொருள் வழக்கில் இதுவரை 20க்கும் அதிகமானவர்கள் கைதாகியுள்ளனர். அவர்களில் ராகிணி மற்றும் சஞ்சனா கல்ராணியின் பெயர் மிகவும் குறிப்பிடத்தக்கது.த நிலையில், சஞ்சனா கல்ராணி, உடல் நிலையை காரணம் காட்டி ஜாமீன் பெற்றுவிட்டார். ராகிணிக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. இதேபோன்று ஆர்.டி.ஓ அதிகாரி ரவி சங்கர், தொழில் அதிபர் ராகுல், வீரேன் கண்ணா உள்பட பலர் இன்னும் சிறையில் தான் உள்ளனர்.

மேலும் சிலரை சி.சி.பி போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். அவர்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா, கொழும்பில் கேசினோ நடத்தி வரும் ஷேக் பைசல் ஆகியோரை பிரத்யேக தனிப்படை அமைத்து தேடி வந்தனர். முன்னதாக சில ஆதாரங்களுக்கான ஆதித்யா ஆல்வாவின் ஹெப்பாளில் உள்ள வீடு மற்றும் ரிசார்ட்டுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது போதை பொருட்கள் மற்றும் எந்தெந்த போதை பொருள் மாபியாக்களுடன் ஆதித்யா ஆல்வாவிற்கு தொடர்பு இருந்தது என்பன உள்பட பல்வேறு ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்தது. அதை வைத்து  ஆதித்யா ஆல்வாவை ஒவ்வொரு மாநிலத்திலும் தனிப்படை போலீசார் மப்டியில் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதித்யா ஆல்வா சென்னையில் சுற்றி திரிந்ததாக  தனிப்படைக்கு தகவல் கிடைத்தது.
அப்போது கிடைத்த ஆதாரங்களை வைத்து நேற்று முன்தினம் இரவு ஆதித்யா ஆல்வாவை சி.சி.பி தனிப்படையினர் கைது செய்தனர். அவரை பெங்களூரு அழைத்து வந்த போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டன்பேட்டை டிரக்ஸ் வழக்கில் கைது
போதை பொருள் வழக்கில் ஆத்தியா ஆல்வா கைதானது குறித்து சி.சி.பி இணை கமிஷனர் சந்தீப் பாட்டீல் கூறியதாவது; பெங்களூரு காட்டன்பேட்டையில் 2018ம் ஆண்டு போதை பொருள் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகை ராகிணி, நண்பர் ரவி சங்கர், வீரேன் கண்ணா, முன்னாள் அமைச்சர் மகன் ஆதித்யா ஆல்வா ஆகியோர் கலந்து கொண்டனர். தடையை மீறி நடந்த இந்த விருந்து நிகழ்ச்சி குறித்து காட்டன்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகியிருந்தது. அதே நேரம் பானஸ்வாடி போதை பொருள் வழக்கும் விஸ்வரூபம் எடுத்ததால், இரண்டு வழக்கிலும் ஒரே நபர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து பலரை சி.சி.பி போலீசார் கைது செய்தனர். ஆதித்யா ஆல்வா தலைமறைவாக இருந்தார். அவரை கைது செய்யும் நோக்கில் பெங்களூரு, மும்பையில் சோதனை நடந்தது. ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. சி.சி.பி தனிப்படையினர் அவரை கைது செய்துள்ளனர். தற்போது அவரிடம் காட்டன்பேட்டை போதை பொருள் வழக்கு மற்றும் கன்னட திரையுலகினர் மற்றும் போதை பொருள் சப்ளையர்களுடனான தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

Tags : minister ,Chennai , Former minister's son arrested in Chennai
× RELATED அண்ணாமலை என்ன ஜோசியரா?: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி