கர்நாடகாவுக்கு 7 புது அமைச்சர்கள்: இன்று பதவியேற்பு

பெங்களூரு: கர்நாடக பாஜ அரசின் மூன்றாவது கட்ட அமைச்சரவை விஸ்தரிப்பு இன்று நடக்கிறது. புதியதாக பொறுப்பேற்கும் அமைச்சர்களுக்கு ஆளுநர் வி.ஆர்.வாலா பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜ ஆட்சி அமைந்து 18 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் அமைச்சர்கள் மொத்தம் 27 பேர் உள்ளனர். இன்னும் 7 இடங்கள் நிரப்பாமல் காலியாகவுள்ளது. அமைச்சரவை விஸ்தரிக்க கட்சி மேலிடம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து இன்று பிற்பகல் 3.50 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடக்கிறது. இதை செய்தியாளர்களிடம் உறுதி செய்த முதல்வர் எடியூரப்பா, ‘‘அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும். காலியாக இருக்கும் 7 இடங்கள் மட்டும் நிரப்பப்படுமா? அல்லது அமைச்சரவையில் இருந்து சிலரை நீக்கிவிட்டு மாற்றி அமைக்கப்படுமா? என்பதை நாளை (இன்று) காலை தெரிவிப்பேன். கட்சி மேலிட பொறுப்பாளர் அருண்சிங் இன்று காலை 10 மணிக்கு பெங்களூரு வருகிறார். அவருடன் ஆலோசனை நடத்தி, இதுபற்றி தெரிவிக்கப்படும்,’’ என்றார்.

Related Stories:

>