அமெரிக்காவில் கொரில்லாவுக்கு கொரோனா

சான்டியாகோ: அமெரிக்காவில் சான்டியாகோ உயிரியல் பூங்காவில் கொரில்லா குரங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சான்டிகோ உயிரியல் பூங்காவில் 8 கொரில்லா குரங்கள் ஒன்றாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவைகளில் சில குரங்களுக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் வனவிலங்குகளை பராமரிக்க வந்த குழுவில் ஒருநபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆனாலும், அந்த நபர் முழு நேரமும் மாஸ்க் அணிந்தபடி இருந்துள்ளார். அவரிடமிருந்து கொரில்லாக்களுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது. கொரில்லாக்களுக்கு இருமல் தவிர வேறெந்த பெரிய பாதிப்பும் இல்லை.

Related Stories:

>