×

சபரிமலையில் நாளை மகர ஜோதி தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. நாளை பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடக்கிறது. இந்த பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரண பெட்டி, ஊர்வலம் நேற்று பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்பட்டது. இது 14ம் தேதி மாலை 5.30க்கு சரங்குத்தி வந்தடையும். பின்னர், சன்னிதானம் வரும் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவித்து தீபாராதனை நடக்கும். இதையடுத்து, பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரியும். தற்போது, தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் வரும் 19ம் தேதி வரை தரிசனம் செய்யலாம். இந்நிலையில், சபரிமலையில் மகரவிளக்கு தரிசனத்திற்காக தற்காலிக கொட்டகை அமைத்து பக்தர்கள் தங்கக் கூடாது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் இதை உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* படிபூஜை முன்பதிவு 2037 வரை முடிந்தது
சபரிமலையில் வரும் 2037ம்  ஆண்டு வரை படிபூஜைக்கான முன்பதிவு முடிந்தது. இதற்கான கட்டணம் ரூ.75 ஆயிரம். இது, மிகவும் விலையுயர்ந்த வழிபாடுகளில் ஒன்றாகும். சபரிமலையில் நேற்று முன்தினம் படிபூஜை நடந்தது. மகரவிளக்கிற்கு பிறகு, 15 முதல் 19ம் தேதி வரை படிபூஜை நடக்கும்.

Tags : Sabarimala , Capricorn torch vision in Sabarimala tomorrow
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு