ஜார்கண்டிலும் பறவைக் காய்ச்சல்

தும்கா: கேரளா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் இமாச்சல், அரியானா, குஜராத் மாநிலங்களைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், டெல்லி மாநிலங்களிலும் நேற்று முன்தினம் பறவைக் காய்ச்சல் உறுதியானது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் தும்கா மாவட்டத்தில் நேற்று ஏராளமான காகங்கள், மைனாக்கள், கொக்குகள் இறந்து கிடந்தன. இதனைப் பார்த்த கிராம மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த அதிகாரிகள் அவற்றின் மாதிரிகளை சேகரித்து ராஞ்சியில் உள்ள ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆய்வு முடிவில்தான் இவை பறவைக் காய்ச்சலால் இறந்ததாக என்பது உறுதியாகும். இதனால், இம்மாநில மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories:

>