×

7 மாதத்துக்கு பின் கொரோனா பாதிப்பு 12,584 ஆக குறைந்தது

புதுடெல்லி: நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்துக்கான கொரோனா பாதிப்பு, பலி, சிகிச்சை பெறுவோர், குணமடைந்தோர் குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
* கடந்த 24 மணி நேரத்தில் 12,584 பேர் புதிதாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,04,79,79 பேர் ஆக உயர்ந்துள்ளது.
* நேற்று ஒரே நாளில் 167 பேர் பலியானதைத் தொடர்ந்து, நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 1,51,327 பேர் ஆக அதிகரித்துள்ளது.
* குணமடைந்தோரின் எண்ணிக்கை இதுவரை 1,01,11,294 பேர் ஆக உள்ளது. இதனால் குணமடைந்தோரின் விகிதம் 96.49 சதவீதமாக உள்ளது.
* சிகிச்சை பெறுவோரது எண்ணிக்கை 2,16,558 பேர் ஆக உள்ளது.
* கடந்த திங்களன்று 8,97,056 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதை சேர்த்து, இதுவரை 18 கோடியே 26 லட்சத்து 52 ஆயிரத்து 887 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

Tags : After 7 months the corona exposure dropped to 12,584
× RELATED அசாமில் 7 ரயில்கள் ரத்தால்...