விபத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கிற்கு அறுவை சிகிச்சை

பனாஜி: கோவாவைச் சேர்ந்த மத்திய ஆயுஷ் மற்றும் பாதுகாப்பு துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக், நேற்று முன்தினம் வட கர்நாடகா வழியாக கோகனர்னாவில் உள்ள கோயிலுக்கு சென்ற போது, அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் அவரது மனைவியும், உதவியாளரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த அமைச்சர் நாயக் உள்பட 3 பேர் உயர் சிகிச்சைக்காக கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவரது இரண்டு கைகள், காலில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவுக்கு நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  கோவா முதல்வர் பிரமோத் சாவந்தை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அமைச்சரின் உடல் நலம் குறித்து கேட்டு அறிந்தனர்.

Related Stories: