×

சாலை விரிவாக்க பணிக்கு விவசாய நிலம் கையகப்படுத்துவதை நிறுத்தகோரி கலெக்டரிடம் திமுக மனு சாலை விரிவாக்க பணிக்கு விவசாய நிலம் கையகப்படுத்துவதை நிறுத்தகோரி கலெக்டரிடம் திமுக மனு

திருவள்ளூர்: மாமல்லபுரம் முதல் காட்டுப்பள்ளி எண்ணூர் துறைமுகம் வரை சாலை விரிவாக்கம் பணிக்கு விவசாய நிலங்களை கைப்பற்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சார்பில் திருவள்ளூர் கலெக்டர் பொன்னையாவிடம் திமுக மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர், ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமையில் விவசாயிகள் கொடுத்த மனுவின் விவரம்: தமிழக அரசு சென்னை எல்லை சாலை திட்டத்துக்கு மாமல்லபுரம் முதல் காட்டுப்பள்ளி எண்ணூர் துறைமுகம் வரை சாலை விரிவாக்கம் பணிக்கு நிலம் கைப்பற்றுவதற்கு செய்து வருகின்றனர். இதில் மேலானூர், கீழானூர், விஷ்ணுவாக்கம், கரிகலவாக்கம், வெள்ளியூர் கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளின் விவசாய நிலங்கள் கைப்பற்றப்பட்டு வருகிறது.

மூன்று போகமும் விவசாயம் செய்யக்கூடிய இந்த நிலங்களை கைப்பற்றுவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஏற்கனவே செங்குன்றம் - திருவள்ளூர் சாலை நான்கு வழிச்சாலையாக உள்ளது. அதனருகில் 100 அடி தூரத்தில் இந்த சென்னை எல்லை சாலை அமைகிறது. இதற்காக ஆட்சேபனை தெரிவித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து மேற்கண்ட கிராம விவசாயிகள் 51 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணைக்காக வரும் 14ம் தேதி வருகிறது. எனவே விவசாய நிலங்கள் கைப்பற்றுவதை அரசு நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Collector ,DMK ,acquisition ,land , DMK petitions Collector to stop acquisition of agricultural land for road widening work
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...