பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு: எஸ்பி அரவிந்தன் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் எஸ்பி அரவிந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பொங்கலன்று பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன்படி கோயில்கள், சாமி ஊர்வலங்கள், சுற்றுலா தலமான பழவேற்காடு, காட்டுப்பள்ளி கடற்கரை, பூண்டி நீர்தேக்கம், சோழவரம் ஏரி போன்ற பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சுற்றுலா செல்லும் இடங்களுக்கு மதுபானங்களை கொண்டு செல்லுதல், அனுமதி இல்லாத இடங்களில் நீர்நிலைகளில் இறங்கி குளித்தல், பெண்களை கேலி செய்தல் போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories:

>