×

புனே மாநகரில் இருந்து கொரோனா தடுப்பூசி பெங்களூரு வந்தது

பெங்களூரு: கொரோனா தடுப்பூசி பலத்த பாதுகாப்புடன் பெங்களூரு கொண்டுவரப்பட்டது. வரும் 16ம் தேதி முதல் பொதுமக்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் தடுக்கும் வகையில் செரோம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷில்டு தடுப்பூசி வரும் 16ம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுமக்களுக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே மாநகரில் உள்ள செரோம் நிறுவனத்தில் இருந்து 9 விமானங்கள் மூலம் பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட மாநகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டெம்போவில் 6.48 லட்சம் கோவிஷில்ட் தடுப்பூசிகள் கொண்ட பாக்ஸ் பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் உள்ள கர்நாடக மாநில சுகாதார துறை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அங்கிருந்து மாநிலத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும் தடுப்பூசிகள் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது. முதல் கட்டமாக சுகாதார துறையில் உள்ளவர்கள் உள்பட கொரோனா போராளி படையில் இருப்பவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வரும் 16ம் ேததி காலை 8 மணிக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்படும் என்றும் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

6.48 லட்சம் தடுப்பு மருந்து அமைச்சர் சுதாகர் கூறியதாவது:
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மருந்து வருகிற 16ம்தேதி நாடு முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறது.  முதற்கட்டமாக 6.48 லட்சம் தடுப்பு மருந்துகள் நேற்று வந்தடைந்தது. பெங்களூரு அனந்தராவ் சர்க்கிள் அருகேயுள்ள சுகாதார மையத்தில் இது சேமிக்கப்பட்டுள்ளது. 54 அட்டை பெட்டிகளில் வந்த மருந்து  பாதுகாப்பாக சேமித்து வைத்துள்ளோம்.  இரண்டாவது கட்டமாக 1.48 லட்சம் தடுப்பு மருந்துகள் மாநிலத்திற்கு நாளை வரும் என எதிர்பார்க்கிறோம்  என்றார்.

அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கும்  தடுப்பூசிகள் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் தடுப்பூசி  போட்டுகொள்ள யார் பதிவு செய்துள்ளார்களோ அவர்களுக்கு மட்டும் போடப்படும்  என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : Bangalore ,Pune , corona vaccine came to Bangalore from Pune
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...