‘கோவாக்சின்’ வேண்டாம்: சட்டீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ அறிவிப்பு

ராய்ப்பூர்: கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள ‘கோவிஷீல்டு, கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசி மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி கொரோனா தடுப்பூசி போடும் பணி வருகிற 16ம் தேதி தொடங்குகிறது. அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆனால் காங்கிரஸ் ஆட்சி செய்யும் சட்டீஸ்கர் மாநிலம் ‘கோவாக்சின்’ தடுப்பூசியை அனுமதிக்க மாட்டோம் என்று திடீரென அறிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ கூறுகையில், ‘‘கோவாக்சின்’ தடுப்பூசியின் சோதனை இன்னும் முடியவில்லை. அதற்குள் அனுமதி அளித்திருக்கிறார்கள். சட்டீஸ்கர் மாநிலத்தில் இந்த தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். மனிதர்கள் வாழ்க்கையில் நாம் அலட்சியமாக நடந்து கொள்ள முடியாது’ என்று கூறினார்.

நாடு முழுவதும் தடுப்பூசி சப்ளை செய்யப்பட்டு வரும்நிலையில், குறிப்பிட்ட தடுப்பூசியை பயன்படுத்த மாட்டோம் என்று சுகாதார அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>