×

தொடர்ந்து மழையால் காவிரி ஆற்றில் கல்லணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறப்பு..!

சென்னை: காவிரி டெல்டா பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் கல்லணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. காவிரி டெல்டா நடவு செய்யப்பட்டுள்ள சம்பா தாளடி மற்றும் ஒரு போக நெற்பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் காவிரியில் கல்லணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 509 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதனை பொதுப்பணி துறையினர் காவிரி வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆறுகளில் திறக்காமல் ஒட்டுமொத்தமாக கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடுகின்றனர். அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் சென்னை வீராணம்  ஏரிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : fort ,river ,Cauvery ,Kollidam , Continuous rain, Cauvery river, fort, water, opening
× RELATED நூற்பு மில்லில் பயங்கர தீ விபத்து