×

5 மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல் குறித்து உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுடன் இந்திய தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை..!

டெல்லி: தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல் குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும், தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மத்திய துணை ராணுவப் படையை அனுப்புவது குறித்தும் இந்த ஆலோசனையானது நடைபெறுகிறது.

இந்தியாவை பொறுத்தவரையில் 5 மாநிலங்களில் வருகின்ற ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளில் மே மாதத்தில் தேர்தல் நடத்த அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் பணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், இந்த 5 மாநில தேர்தல்களில் எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு துணை ராணுவ படையை அனுப்புவது குறித்தும் இந்த ஆலோசனையானது நடைபெறுகிறது. குறிப்பாக 5 மாநிலங்களில்  எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்தினால், பாதுகாப்பு பணி கைக்குள் இருக்கும் என்று ஆலோசனையானது நடைபெறுகிறது.

மேலும், மத்திய துணை ராணுவப் படையை பொறுத்தவரையில் பல இடங்களில் இருந்து தேர்தல் நடத்தப்படும் மாநிலங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். எனவே ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு  துணை ராணுவப் படை வீரர்கள் தேவைப்படுவார்கள், எந்தெந்த மாநிலங்களிருந்து பாதுகாப்புப்பணிக்கு சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு துணை ராணுவப் படை வீரர்கள் எப்படி செல்வார்கள் என்பன குறித்து இந்த ஆலோசனை நடைபெறுகிறது.


Tags : election officials ,Ajay Palla ,Indian ,elections ,states , Election, Home Secretary, Indian Electoral Officers, Consulting
× RELATED பத்தனம்திட்டா தொகுதியில் மாமியாரின்...