தங்கள் நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என பல நாடுகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை அதிகாரி பேட்டி..!

டெல்லி: சீரம் இன்ஸ்டிடியூட்டின் முதல் 100 மில்லியன் டோஸ்களுக்கு கொரோனா தடுப்பூசியின்  விலை ரூ.200 ஆக இருக்கும். இது முன்கள பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு உதவும் விதமாக எடுத்த முடிவு என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பூனவல்லா தகவல் தெரிவித்துள்ளார்.

தற்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: தனியாருக்கு ஒரு டோஸ் ரூ.1000திற்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசிற்கு முதல்  100 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசியின்  விலை ரூ.200 ஆக இருக்கும்  பிறகு  சற்று கூடுதலான விலையில் கொடுக்கப்படும். எந்த லாபமும் இன்றி அரசிற்கும் , மக்களுக்கும் துணை நிற்க விரும்புவதாக தெரிவித்தார். ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிற்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அனைவரும் நலமாக இருக்க தேவையான தடுப்பூசிகள் தயார் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகிறது

மேலும், அவர் கூறியதாவது: ஒவ்வொரு மாதமும் 70-80 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்கிறோம். இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு எத்தனை தடுப்பூசிகள் வழங்கலாம் என்பதைப் பார்க்க திட்டமிட்டு வருகிறோம். இதனையடுத்து, சுகாதார அமைச்சகம் முக்கிய திட்டங்களை உருவாக்கியுள்ளது. லாரிகள், வேன்கள் மற்றும் குளிர் சேமிப்பிற்கான பிரைவேட் பிளேயர்களுடன் எங்களுக்கு கூட்டு உள்ளது.

சீரம் நிறுவனத்தில் இருந்து தங்கள் நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என்று நிறைய நாடுகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன. அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சிக்கிறோம். எங்கள் மக்கள்தொகை மற்றும் தேசத்தையும் நாங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>