×

கொரோனா வழிமுறைகளை பின்பற்றாதோருக்கு அபராதம்!: இதுவரை சென்னையில் 3.48 கோடி வசூல்.. மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத நிறுவனங்கள், தனி நபர்களிடம் இருந்து சுமார் மூன்றரை கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கடைகள், நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்ற பாதுகாப்பு வழிகளை பின்பற்றப்படுகின்றனவா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத கடைகள், நிறுவனங்கள், உணவகங்களில் கடந்த ஜனவரி 8ம் தேதி வரை 3 கோடியே 48 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அபராதம் வசூலிப்பது அரசின் நோக்கமல்ல என குறிப்பிட்டுள்ள பிரகாஷ், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்ததால் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கட்டாயம் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

ஆனால் அதனை கருத்தில் கொள்ளாத மக்களோ, போதிய விழுப்புணர்வு இல்லாமல் மாஸ்க் போடாமல் சுற்றித்திரிகின்றனர். பல நாட்களுக்கு பிறகு இயக்கப்பட்டு வரும் பேருந்துகளில் கூட தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என புகார்கள் எழுகிறது. இவ்வாறு இருக்கும் சூழலில் மக்களிடம் கொரோனாவின் தீவிரத்தை உணர்த்தும் வைக்க சென்னை மாநகராட்சி அபராதம் விதித்தது. அதன்படி சென்னையில், பொதுமுடக்க விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை நாட்களில் ரூ.3.48 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

Tags : Corona ,Corporation announcement ,Chennai , Corona Procedure, Chennai, Rs 3.48 crore, fine
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...