இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், வீரர் பிரனாய்-க்கு 2வது முறையாக கொரோனா : பாங்காக் மருத்துவமனையில் அனுமதி!!

பாங்க்டாக் : இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், வீரர் ஹெச்.எஸ்.பிரனாய் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் விளையாடுவதற்காக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், பிவி சிந்து உள்ளிட்ட வீராங்கனைகள் பாங்காங் சென்றுள்ளனர். போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணியினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் சாய்னா நேவால், பிரனாய் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் இருவருக்கும் 10 நாட்கள் பாங்காக் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் இருவருடனும் நெருக்கமாக இருந்த அனுராக் காஷ்யப்பும் தனிமைப்படுத்தப்பட்டார் என்று இந்திய பாட்மிண்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த மூன்று பேரும் தாய்லாந்தில் நடக்கும் பாட்மிண்டன் போட்டிகளில் விளையாடமாட்டார்கள். கடந்த மாதம் சாய்னா, பிரனாய், காஷ்யப், குருசாய்தத், பிரணவ் சோப்ரா ஆகியோருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சையில் இருந்து குணமடைந்தனர்.

Related Stories:

>