×

இந்தியா - சீனா உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!: லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த 10,000 சீன ராணுவ வீரர்கள் வாபஸ்..!!

டெல்லி: கிழக்கு லடாக்கில் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த 10 ஆயிரம் ராணுவ வீரர்களை சீனா திரும்பப் பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய - சீன எல்லை கட்டுப்பாடு பகுதி அருகே கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. கடந்த ஆண்டு 20க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும், பாங்கம் சோ ஏரி பகுதியிலும் சீன துருப்புகள் அத்துமீறி ஆக்கிரமிக்க முயற்சித்த போது இந்திய படைகள் தகுந்த பதிலடி கொடுத்து முறியடித்தன. ஒருபக்கம் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு மறுபக்கம் தொடர்ந்து ஆக்கிரமிப்பு வேளையில் சீனா ஈடுபட்டு வந்தது.

மேலும் எல்லையில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை குவித்து பதற்ற நிலையையும் ஏற்படுத்தியது. இதன்பின்னர் இருநாட்டு ராணுவ தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு எல்லையில் இருந்து வீரர்களை திரும்ப பெறுவது என முடிவு செய்யப்பட்டது. இதனால் எல்லை பகுதியில் சற்று பதற்றம் தனிந்தது. எல்லையை பதற்றத்தை குறைப்பதற்காக இரு தரப்பினரும் 9வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவும் சீனாவும் எப்போது பேச்சுவார்த்தை நடத்தும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

இந்நிலையில் கிழக்கு லடாக்கில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகேயுள்ள பள்ளத்தாக்கு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 10 ஆயிரம் ராணுவ வீரர்களை சீனா திரும்பப் பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா - சீனா ராணுவமிடையே படைவீரர்களை விலக்கிக் கொள்வது தொடர்பாக பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை இந்தியா - சீனா உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.


Tags : troops ,India ,China ,border ,Ladakh , India - China, Ladakh border, 10,000 Chinese troops, withdrawn
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...