×

தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமல்ல, தாமாக முன்வருபவர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்படும் : சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை : மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் என்றும் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமல்ல, தாமாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை டி.எம்.எஸ். அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் ஆயத்த பணிகள், கோவிட் தடுப்பு பணிகள் தொடர்பாக தேவையான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி தமிழகத்திற்கு 5,56,500 தடுப்பு மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

5,36,500 கோவிட் ஷீல்ட், 20,000 கோவாக்ஸின் தடுப்பு மருந்துகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.தகிழக மருந்துக் கிடங்கு உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் முதல்கட்டமாக தடுப்பு மருந்துகள் வைக்கப்படவுள்ளன.சுமார் 10.30 மணிக்கு புனேவில் இருந்து தடுப்பூசி டோஸ்கள் சென்னை விமான நிலையம் வந்தடையும்.பொது சுகாதாரத்துறையின் இணை இயக்குநர் வினய் விமான நிலையத்தில் இருந்து தடுப்பு மருந்துகளை கொண்டு வரும் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.டி.எம்.எஸ் வளாகத்தில் இருந்து 10 கிடங்குகளுக்கு அந்த தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பிரித்து வழங்கப்படும்.

மாவட்ட வாரியாக சேமிப்பு கிடங்குகள் தயார் நிலையில் உள்ளது.தடுப்பூசி டோஸ்களை கொண்டு செல்ல சுகாதார மாவட்டங்கள் என கணக்கெடுக்கப்பட்ட மாவட்டங்களில் 45 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.தமிழகத்தில் 2 ஆயிரம் மையங்கள் தயார் நிலையில் உள்ளது.மத்திய அரசு தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகிறது.சுய விருப்பமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு 2 கட்டங்களாக தடுப்பு மருந்துகள் வழங்கப்படும். ஒருவருக்கு 30 நாள் இடைவேளையில் 2 முறை தடுப்பூசி போடப்படும். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் முதல்கட்டமாக முன்களப்பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என வரிசைப்படுத்தி தடுப்பு மருந்துகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்துகள் வந்தாலும் சரிபார்ப்பு உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் முடிவடைந்து இன்று மாலைக்கு மேல் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி துவங்கும்.நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை தவிர்த்து குணமடைந்தவர்கள், பிற உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.தடுப்பு மருந்தை தாண்டி அனைவரும் முகக் கவசம் அணிவதிலும், கைகளை சுத்தமாக கழுவுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்,என்றார்.

Tags : Radhakrishnan , Department of Health, Secretary, Radhakrishnan
× RELATED ஒன்றியத்தில் சமதர்ம ஆட்சி அமைந்திட...