×

கறம்பக்குடி பகுதிகளில் தொடர் மழை..! வயலில் சாய்ந்த நெற்பயிர்கள் அழுகியது: அரசு நிவாரணம் வழங்க வேண்டுகோள்

கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக சாய்ந்த நெற் கதிர்களால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதிகள் முழுவதும் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மற்றும் கன மழை பெய்து வருகிறது.விவசாயிகள் அனைவரும் தாங்கள் வயல்களில் கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு வயல்களில் சாகுபடி செய்துள்ள நெற்கதிர்கள் அனைத்தும் இன்னும் சில தினங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக நெற்கதிர்கள் அனைத்தும் வயலில் சாய்ந்தது. மேலும் கறம்பக்குடி பகுதிகள் முழுவதும் விவசாய நிலங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாகுபடி செய்துள்ள நிலக்கடலை மற்றும் உளுந்து போன்ற அனைத்து பயிர்களும் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கறம்பக்குடி தாலுகா பிலாவிடுதி வட்டத்தில் உள்ள பாசன பரப்பில் உள்ள புதுக்குளம், பெரிய எழும்பி, முகூர்த்த நாறி போன்ற நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர் பரபரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்கதிர்கள் சேதம் அடைந்துள்ளது. கறம்பக்குடி தாலூக்காவிற்கு உட்பட்ட கறம்பக்குடி சரகம் மற்றும் மழையூர் சரகம் உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் மூலம் விவசாயம் செய்யப்பட்டுள்ள நடவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கியும் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாகவும் மேலும் அழுகும் நிலையில் உள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.

எனவே கறம்பக்குடி பகுதிகள் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட நெற் பயிர்கள், நிலக்கடலை, உளுந்து பயிர்கள், நெற் கதிர்கள் அனைத்திற்கும் விவசாயிகள் அனைவருக்கும் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள கோரிக்கை விடுத்துள்ளனர். கறம்பக்குடி தாலுக்காவில் உள்ள மழையூர் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி நேற்று மழையூர் மற்றும் அருகே உள்ள அறியாண்டி பகுதிகளில் சேதம் அடைந்து சாய்ந்த நிலையில் காணப்படும் நெற் பயிர்கள் மற்றும் நெற் கதிர்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல் பாதிப்பு அடைந்த நில கடலை பயிர்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிப்புக்குள்ளான விவரங்களை சேகரித்தார். தாசில்தார் ஷேக் அப்துல்லா உடன் சென்றார்.

Tags : areas ,Karambakudy ,paddy fields ,Government , Continuous rain in Karambakudy areas ..! Leaning paddy fields rotten: Government appeals for relief
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...