பொங்கல் பண்டிகையையொட்டி திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்

திருச்செந்தூர்: பொங்கல் பண்டிகையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தைப்பொங்கல் பண்டிகையையொட்டி பக்தர்கள் விரதமிருந்து பாதயாத்திரையாக வருவது வழக்கம். நெல்லை, தூத்துக்குடி, சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, குமரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து கோயிலுக்கு வருவார்கள். வழக்கம்போல் இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

பக்தர்கள் அலகு குத்தி, காவடி, பால்குடம் எடுத்து வருவதோடு லோடு ஆட்டோ, மற்றும் வேன்களில் முருகன் படங்களை அலங்கரித்து பக்தி பாடல்கள் போட்டு வருகிறார்கள். இதனால் தூத்துக்குடி- திருச்செந்தூர், நெல்லை- திருச்செந்தூர் சாலைகள் முருக பக்தர்களால் நிரம்பி வழிகிறது. நாளை மறுநாள் (14ம் தேதி) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30க்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 12 மணிக்கு உச்சிகால தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜையும் நடக்கிறது.

Related Stories:

>