×

ஜப்பானில் 4 பேருக்கு கொரோனா 3.0 : இங்கிலாந்தில் உருமாற்றிய கொரோனாவை விட வித்தியாசமானது...

டோக்கியோ : பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸில் இருந்து மாறுபட்ட புதிய கொரோனா வைரஸ் ஜப்பானில் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் வுடன் வுகான் நகரத்தில் இருந்து கடந்த ஆண்டு வெடித்து கிளம்பிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 210க்கும் மேற்பட்ட நாடுகளை மிரட்டி வருகிறது. இதனிடையே கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு முதன்முதலில் அங்கீகாரம் வழங்கிய பிரிட்டனில் மரபணு மாற்றம் அடைந்த 2ம் வகை கொரோனா வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் ஜப்பானில் உருமாற்றம் அடைந்துள்ள 3ம் வகை கொரோனா கிருமியை அந்நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பிரேசிலில் இருந்து டோக்கியோ விமான நிலையத்திற்கு வந்த 4 பேருக்கு இவ்வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அவர்களில் இருவருக்கு கொரோனா தொற்றுக்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. உடனடியாக அந்த 4 பேரையும் தனிமைப்படுத்திய ஜப்பான் சுகாதாரத் துறை அதிகாரிகள், மாறுபட்ட கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார மையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். மாற்றம் அடைந்துள்ள மற்றொரு கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை பல்வேறு நாடுகளுடன் பகிர்ந்து கொண்டுள்ள ஜப்பான், தற்போது போடப்படும் தடுப்பூசிகள் புதிய வைரஸுக்கு எதிராக செயல்படுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றன.


Tags : Corona 3.0 ,Japan ,UK ,Corona Corona , Japan, Corona 3.0, UK
× RELATED ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில்...