புனேவில் இருந்து விமானத்தில் 5,56,036 கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு காலை 10.30 மணிக்கு வருகிறது: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

சென்னை: புனேவில் இருந்து விமானத்தில் 5,56,036 கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு காலை 10.30 மணிக்கு வருகிறது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து தமிழகத்தின் 10 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். சீரமின் 5.36 லட்சம் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் 20 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வருகிறது. ஒருவருக்கு 30 நாள் இடைவேளையில் 2 முறை தடுப்பூசி போடப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் கூறினார்.

Related Stories: