×

விடாமல் அச்சுறுத்தும் கொரோனா..! உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 9.12 கோடியை தாண்டியது: 19.51 லட்சம் பேர் உயிரிழப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19.51 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,951,884 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 91,274,892 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 65,212,294 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 108,821 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 9.13 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 91,303,166 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,952,166 பேர் உயிரிழந்துள்ளனனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 65,271,155 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 24,079,845 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,141,590 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 385,262 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 13,676,911 என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,479,913 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 151,364 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 10,110,710 என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,133,833 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 203,617 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 7,207,483என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Corona ,victims , Corona threatening not to let go ..! Worldwide, the number of victims has crossed 9.12 crore: 19.51 lakh people have died
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...