×

அரசு மருத்துவமனையில் அவலம்: ஊழியர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி

செங்கல்பட்டு: சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு மகப்பேறு, அவசர சிகிச்சை, விபத்துக்கான அவசர சிகிச்சை பிரிவுகள் உள்பட பல பிரிவுகள் உள்ளன. இதில், மூத்த  மருத்துவர், செவிலியர் என ஏராளமானோர் பணிபுரிகின்றனர். இந்த மருத்துவமனைக்கு தினமும், செங்கல்பட்டு மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் விபத்துகளில் சிக்கி காயமடைபவர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் தஞ்சாவூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு, விபத்தில் சிக்கி கால் எலும்பு முறிந்தது. இதையடுத்து அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு  நேற்று முன்தினம் இரவு காலில் எக்ஸ்ரே எடுக்க சென்றனர்.

ஆனால், அங்கு ஊழியர்கள் பணியில் இல்லை. அதேபோல், அங்கு ஏற்கனவே ஏராளமானோர், நீண்ட வரிசையில் எக்ஸ்ரே எடுப்பதற்காக காத்திருந்தனர். சுமார் ஒருமணி நேரத்துக்கு மேல் காத்திருந்து, மீண்டும் வார்டுக்கு திரும்பினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் எக்ஸ்ரே பிரிவில், ஊழியர்கள் சரிவர வேலைக்கு வருவதில்லை. குறிப்பாக இரவு நேரத்தில், யாருமே வருவது இல்லை. இதனால், நோயாளிகள் கடுமையாக  பாதிக்கப்படுகின்றனர். இதனை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : government hospital , Government Hospital tragedy: lack of staff, patients, severe Awadhi
× RELATED அரசு மருத்துவமனையில் நாள்தோறும் உணவு