ஒலிமுகமதுபேட்டையில் உள்ள தாந்தோணி அம்மன் கோயில் சொத்துக்கள் அபகரிப்பு: பொதுமக்கள் புகார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை,   தாந்தோணி அம்மன் கோயிலுக்கு சொந்தமான சொத்தை, சிலர் முறைகேடாக அபகரிக்க முயற்சிப்பதாக அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள  மனுவில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம், ஒலிமுகமதுபேட்டை வரதப்பன் தெருவில் உள்ள தாந்தோணி அம்மன் கோயில் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது.இக்கோயில் பராமரிப்புக்காக, காஞ்சிபுரம் அடுத்த தாமரை தாங்கல் கிராமத்தில் 4.66  ஏக்கர் நிலம் தாந்தோணி அம்மன் பெயரில் வாங்கினர். இதன்அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு, இந்த நிலத்தை குத்தகைக்கு விட்டு அதில் வரும் வருவாய் மூலம் கோயில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். ஆண்டுதோறும்  ஆடித் தருவிழா நடத்தி, விழா முடிந்ததும் கணக்கு பார்த்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அப்போது, புதிய நிர்வாகிகளிடம் கோயில் பத்திரங்கள், நகைகள் ஒப்படைக்கப்படும். அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிமையான இக்கோயில் நிர்வாகத்தை, ஒரு தனிப்பட்ட சமூகத்தை சேர்ந்த 15 பேர் புதிதாக டிரஸ்ட் உருவாக்கி, கோயில்  சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்கின்றனர். எனவே, தாந்தோணி அம்மன் கோயில் சொத்துக்களை, விற்க முயற்சி செய்யும் தனிப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தாந்தோணி அம்மன் கோயில் நிர்வாகத்தில் எங்கள் பகுதியை  சேர்ந்த அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>