அரசுடன் நடந்த பேச்சவார்த்தையில் உடன்பாடு கேரளாவில் நாளை தியேட்டர்கள் திறப்பு

திருவனந்தபுரம், ஜன. 12: கேரளாவில் முதல்வர் பினராய் விஜயனுடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து சினிமா தியேட்டர்களை நாளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 5ம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை  திறக்க அரசு அனுமதி அளித்தது. ஆனால் உரிமையாளர்கள் கடும் நஷ்டத்தில் இருப்பதால் உடனடியாக தியேட்டர்களை திறக்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும் சினிமா டிக்கெட்டில் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்.  தியேட்டர்களின் மின்கட்டண சலுகை வழங்க வேண்டும். லைசென்ஸ் காலாவதியை நீட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட ேகாரிக்ைககளும் முன்ைவக்கப்பட்டன. இந்த நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் பிலிம் சேம்பருடன்  நேற்று காலை முதல்வர் பினராய் விஜயன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 10 மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படாததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உரிமையாளர்கள்  கோரிக்கை விடுத்தனர். அதை பரிசீலிப்பதாக முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்தார்.

இதையடுத்து தியேட்டர்களை திறக்க உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால் இரவு 2வது காட்சி நடத்தக்கூடாது என முதல்வர் தெரிவித்தார். இதையடுத்து நேற்று இரவு கொச்சியில் கேரள மாநில சினிமா சேம்பர் அவசர கூட்டம் நடந்தது.   கூட்டத்தில் 13ம் தேதி (நாளை) முதல் தியேட்டர்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் படமாக  நடிகர் விஜயின் மாஸ்டர் படம் திரையிடப்படும் என்றும் பின்னர் வரிசையாக மலையாள படங்கள்  திரையிடவும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கேளிக்கை வரி ரத்து

கூட்டத்திற்கு பின் கேரள அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சினிமா தியேட்டர்களுக்கு ஜனவரி முதல் மார்ச் வரை கேளிக்கை வரி ரத்து செய்யப்படும். 10 மாதங்கள் மூடப்பட்டு கிடந்த மின்சார நிலைக்கட்டணம் 50 சதவீதமாக  குறைக்கப்படும். கடந்த ஆண்டு மார்ச் 31க்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய நிலவரியை மாத தவணைகளாக அடைக்கலாம். உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்பு துறை, சுகாதாரம், கட்டிட உறுதி தன்மை உட்பட பல்வேறு  லைசன்ஸ்களின் காலாவதி வரும் மார்ச் 31 வரை நீட்டிக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு நடிகர் சங்க தலைவர் மோகன்லால் மற்றும் திரை துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>