ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது

அமேதி: டெல்லி சட்டமன்ற உறுப்பினரான சோம்நாத் பாரதி, உபியில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் பணிகளை பார்வையிடுவதற்காக சென்றிருந்தார். அங்கு யோகி ஆதித்யநாத் ஆட்சி மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.  மேலும் சர்ச்சையை ஏற்படுத்தும்விதமாக, ‘உத்தரப்பிரதேச மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் மனிதர்களுக்குப் பிறக்கவில்லை. நாய்களுக்குப் பிறக்கின்றன’ என்று பேசியிருந்தார். இதுதொடர்பான புகாரைத் தொடர்ந்து சோம்நாத்தை உபி  போலீசார் நேற்று கைது செய்தனர். முன்னதாக போலீசார் சென்ற போது, சோம்நாத் மீது இளைஞர் ஒருவர் கருப்பு மை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>