பாலத்தில் செல்பி எடுத்தபோது மின்சாரம் பாய்ந்து இருவர் காயம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே 27 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.  தற்போது,  ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதில் தற்காலிக தரைப்பாலம் உடைந்து சேதமடைந்தது. இதனால்,   ஊத்துக்கோட்டைக்கு செல்லும் மக்கள் பாலத்தின் தற்காலிக இரும்பு படிகட்டின் மீது ஏறி ஆற்றை கடந்து செல்கின்றனர். இந்நிலையில்,  நேற்று காலை புதிய மேம்பாலத்தின் மீது சீத்தஞ்சேரி  பஜார் பகுதியை  சேர்ந்த சரண்(16). அவரது தாய்  ராதாவுடன் சென்றார். அப்போது, மின்வயர் இருப்பது தெரியாமல் அதன் அருகே நின்று தனது செல்போனில் செல்பி  எடுத்தார். அப்போது,  அவர் மீது மின்சாரம்  பாய்ந்து காயமடைந்தார்.

இதேபோல் நேற்று மாலை ஒதப்பை கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர்(28).  ஊத்துக்கோட்டையில் இருந்து ஒதப்பை செல்ல மேம்பாலம் மீது தனது நண்பருடன்  நடந்து சென்றார்.  அப்போது தனது செல்போனில் செல்பி  எடுத்தார். அதில்,  மேம்பாலம்  ஓரமாக இருந்த உயர் மின் அழுத்தத்தில் பட்டு மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. காயமடைந்தவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>