×

தடையில்லா சான்றுக்கு 20 ஆயிரம் லஞ்சம்: கலெக்டரின் நேர்முக உதவியாளர் கைது

சென்னை: வீட்டுமனை பிரிவுக்கு தடையில்லா சான்று வழங்க 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற கலெக்டரின் நேர்முக உதவியாளர் கைது செய்யப்பட்டார். மயிலாப்பூரை சேர்ந்தவர் ஆனந்தன் (52). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.  இவருக்கு சொந்தமான  நிலம் மறைமலைநகர் நகராட்சி நின்னகரை பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் வீட்டுமனை பிரிவு ஏற்படுத்தி விற்பனை செய்ய திட்டமிட்டார். இதற்காக தடையில்லா சான்று கேட்டு செங்கல்பட்டு திம்மாவரம் பகுதியில்  உள்ள வேளாண் துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் விண்ணப்ப மனு அளித்தார். ஆனால் ஆனந்தனுக்கு தடையில்லா சான்று வழங்கப்படவில்லை.இதுகுறித்து, இணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள  செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸின் நேர்முக உதவியாளராக உள்ள வேளாண் அதிகாரி சுகுமாரிடம் நேரில் சென்று ஆனந்தன் கேட்டார். அப்போது,   வீட்டுமனை அமைக்க தடையில்லா சான்று வழங்க ₹20ஆயிரம் லஞ்சம் கொடுக்க  வேண்டும். இல்லையென்றால் தடையில்லா சான்று தர முடியாது, என கலெக்டரின் நேர்முக உதவியாளர்

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆனந்தன் இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தார். அவர்கள் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய 20 ஆயிரத்தை ஆனந்தன் நேற்று கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுகுமாரிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.கலைச்செல்வன் தலைமையிலான போலீசார், சுகுமாரை கைது செய்து,  செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார் அதன்படி, செங்கல்பட்டு சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

குடிநீர் வாரிய ஊழியர் கைது
புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆனந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது  வீட்டிற்கு குடிநீர், கழிவுநீர் இணைப்பு கோரி, 39வது வார்டு  குடிநீர் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது, அலுவலக உதவியாளரான  தண்டையார்பேட்டையை சேர்ந்த ஹரி ராவ் (55), இணைப்பு வழங்க 15 ஆயிரம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆனந்த், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். அவர்கள்  ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ₹15 ஆயிரத்தை ஆனந்த் நேற்று ஹரி ராவிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கைது செய்தனர். விசாரணையில், அதிகாரிகளுக்கு பணம் தரவேண்டும்  என்றும், அப்போதுதான் புதிய இணைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Collector ,interview assistant , 20 thousand bribe for unrestricted evidence: Collector's interview assistant arrested
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...