×

10 கோடி, 3 கிலோ தங்கம் சிக்கிய சுற்றுச்சூழல் துறை அதிகாரியின் புதுகை வீட்டில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு; முக்கிய ஆவணங்கள் சிக்கின

திருமயம்: சென்னையில் வீடு, அலுவலகத்தில் 10 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம் சிக்கிய சுற்றுச்சூழல்துறை அதிகாரியின் புதுக்கோட்டை வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். தமிழகத்தில் சுற்றுச்சூழல்துறை அலுவலகங்கள், அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனையிட்டு கோடிக்கணக்கில் பணம், நகைகள், ஆவணங்களை கைப்பற்றி வருகிறது. அதன்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் வேலூர் காட்பாட்டி காந்திநகரில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலக தலைமை பொறியாளராக பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 3 கோடி பணம், 3.5 கிலோ தங்கம், ஆறரை கிலோ வெள்ளியை கைப்பற்றினர்.
இதேபோல், சென்னை பனகல் மாளிகையில் சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிபவர் பாண்டியன்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குளத்துப்பட்டியை சேர்ந்த இவருக்கு திருமயம் கோட்டை பசுமாட வீதியில் சொந்த வீடு உள்ளது.  இவரது அவரது அலுவலகத்தில் கடந்த மாதம் 14ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் நடத்தி 89,000 பறிமுதல் செய்தனர்.  இதனையடுத்து சாலிகிராமம் திலகர் தெருவில் உள்ள பாண்டியனின் வீட்டில் 10 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாது 7 கோடி ரூபாய் மதிப்பிலான 18 சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் பாண்டியனின் கோட்டை பசுமட வீதியில் உள்ள பாண்டியனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று சோதனை  நடத்தினர். சோதனை முடிவில், இரண்டு பைகளில் முக்கிய  ஆவணங்களை எடுத்து சென்றனர்.


Tags : home ,Environment Department , Anti-corruption raid on the home of an Environment Department official who seized 10 crore and 3 kg of gold; Important documents were intercepted
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு