இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் ஸ்டிரைக் துவக்கம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்ட 36 தமிழக மீனவர்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதனிடையே சனிக்கிழமை நள்ளிரவில், தங்கச்சிமடம் மீனவர்கள் 9 பேரை படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இதையடுத்து, மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் பெரிய விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் துவக்கினர். இதனால் 400க்கும் மேற்பட்ட பெரிய விசைப்படகுகள் ராமேஸ்வரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, இறால் மீன்பிடிக்க செல்லும் சிறிய விசைப்படகு மீனவர்கள் நேற்று காலை வழக்கம்போல் கடலுக்கு செல்ல ராமேஸ்வரம் மீன்துறை அலுவலகத்தில் டோக்கன் வாங்க சென்றனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கக்கூடாது என்று பெரிய விசைப்படகு மீனவர்கள் மீன்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Related Stories:

>