மாநில நிர்வாகத்தை கண்டித்து அஞ்சல் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை: நெருக்கடி தரும் மாநில நிர்வாகத்தை கண்டித்து அஞ்சல் ஊழியர்கள் இன்று தி.நகர் தலைமை அஞ்சலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து, அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்க மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அஞ்சல் ஊழியர்களுக்கு அஞ்சலக நிர்வாகம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஒவ்வொரு மாநில அஞ்சல் வட்டத்திற்கும் 50 சதவீதம் கூடுதல் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. வருடா வருடம் இலக்கு நிர்ணயம் செய்வது அதிகரித்தபடி உள்ளது. இது கண்டனத்திற்குரியது. புதிய தொழில்நுட்பம் ஊழியர்களுக்கு சாதகமான ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால், ஊழியர்களுக்கு அது மன அழுத்தத்தை தருகிறது. எனவே, அசாத்திய கணக்குப்படி, வணிக இலக்கு நிர்ணயம் செய்து ஊழியர்களுக்கு நெருக்கடி தரும் அஞ்சல் துறை மாநில நிர்வாகத்தை கண்டித்து இன்று மாலை 4.30 மணிக்கு தி.நகர் தலைமை அஞ்சலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சுமார் 200க்கும் மேற்பட்ட அஞ்சல் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். இவ்வாறு கூறினார்.

Related Stories:

>