×

பயணிகள் முன்பதிவு குறைவால் குறைந்த எண்ணிக்கையில் ஆம்னி பஸ்கள் இயக்கம்

சென்னை: எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் கூட்டம் இல்லாததால் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு மிகவும் குறைவான ஆம்னி பஸ்களே இயக்கப்படுகின்றன. இதுகுறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்குக்கு முன்பு 4 ஆயிரம் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. பிறகு பொதுமுடக்கம் காரணமாக பஸ்கள் இயங்கப்படவில்லை. அதன்பிறகு வழங்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் ஆம்னி பஸ்கள் ஓடத்தொடங்கின. ஆனால் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்கு பள்ளி, கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள் செயல்படாதது தான் காரணம்.

இந்நிலையில் நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால் நடப்பாண்டில் முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்த காரணத்தினால், நேற்று 250 பஸ்களும், இன்று 410 பஸ்களும், நாளை 460 பஸ்களும் மட்டுமே இயக்க திட்டமிட்டுள்ளோம். இது மிகவும் குறைவான இயக்கம் ஆகும். இதனால் எங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Omni , Operation of Omni buses in small numbers due to low passenger bookings
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து