24 மணி நேரத்தில் கொன்று விடுவேன்: உ.பி முதல்வருக்கு மிரட்டல்

லக்னோ: உத்தரபிரதேச முதல்வரை 24 மணி நேரத்தில் கொன்றுவிடுவதாக போலீஸ் கன்ட்ரோல் ரூமின் வாட்ஸ் அப் எண்ணுக்கு மிரட்டல் வந்தது. உத்தரபிரதேச பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அடிக்கடி கொலை மிரட்டல் கடிதம், தொலைபேசி கொலை மிரட்டல், குண்டு வெடிப்பு அச்சுறுத்தல்கள் வருவதுண்டு. இந்த முறை 112 என்ற கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு கொலை மிரட்டல் செய்தி வந்துள்ளது. இதுதொடர்பாக, சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து வாட்ஸ் அப்பில் கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘போலீஸ் கண்ட்ரோல் ரூம் எண் 112-இன் வாட்ஸ் அப் எண்ணிற்று சனிக்கிழமை இரவு 8:07 மணிக்கு மொபைல் எண் 88740 28434 என்ற எண்ணில் இருந்து ஒரு செய்தி வந்தது. இதில், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. மிரட்டல் விடுத்தவர் 24 மணி நேரத்திற்குள் அவரை கொன்றுவிடுவதாகவும், நீங்கள் (போலீஸ்) கண்டுபிடிக்க முடிந்தால் என்னை கண்டுபிடியுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த கன்ட்ரோல் ரூம் அதிகாரி சஹேந்திர யாதவ் அளித்த புகாரின் அடிப்படையில், சுஷாந்த் கோல்ஃப் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்’ என்றனர்.

Related Stories:

>