ஊத்துமலை அனுமந்தபுரி ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் நாளை அனுமன் ஜெயந்தி விழா

நெல்லை: ஊத்துமலை மலை அடிவாரம் அனுமந்தபுரியில் உள்ள ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் நாளை (12ம் தேதி) அனுமன்ஜெயந்தி விழா நடக்கிறது. விழாவையொட்டி அதிகாலையில்  நவகிரக சுதர்சன ஆஞ்சநேயர் மூல மந்திர ஜெப ஹோமம், ஆஞ்சநேயர் சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் முககவசம் அணிந்து, தனிமனித இடைவெளியுடன், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.  விழா ஏற்பாடுகளை ராமபக்த ஆஞ்சநேயர் பக்த சபா மற்றும் ஊத்துமலை மலை அடிவார கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories:

>