×

கொரோனா போர்வீரர்கள், முன்னணி தொழிலாளர்கள் தடுப்பூசி போடுவதற்கான செலவுகளை மத்திய அரசு ஏற்கும்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது தங்களுக்கான முறை வரும்போது அரசியல்வாதிகள் தடுப்புசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதல் அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். இந்தியாவில் ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்சின்’ ஆகிய 2 மருந்துகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசிகளை தயாரித்துள்ளது.சீரம் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

சீரம் நிறுவனத்திடம் இருந்து கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தை,  ஒரு டோஸ் 200 ரூபாய் என்ற விலையில் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. வருகிற 16-ந் தேதி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து இன்று பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன்  ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தடுப்பூசி விநியோகம், பாதுகாப்பு மற்றும் பிற விஷயங்கள்  குறித்து ஆலோசித்தார். ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது: கொரோனா நெருக்கடியில் ஒற்றுமையாக  நாம் ஒன்றாக இணைந்து பணியாற்றினோம் என்பதில் திருப்தி அடைகிறேன்.

விரைவான முடிவுகள் முழு உணர்திறனுடன் எடுக்கப்பட்டன. இதன் விளைவாக, கொரோனா உலக நாடுகளில் பரவியது போல்  இந்தியாவில் பரவவில்லை. கொரோனா தடுப்பூசியின் போது  இந்தியாவின் தடுப்பூசி போட்ட கடந்த கால அனுபவம் கை கொடுக்கும். இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதே மத்திய அரசின் இலக்கு ஆகும். ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட இரண்டு  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  தடுப்பூசிகளைத் தவிர, நாட்டில் இன்னும் நான்கு  தடுப்பூசிகள் உள்ளன. முதல் கட்டமாக சுமார் 3 கோடி சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கு  தடுப்பூசி போடப்படும். சுகாதார ஊழியர்கள் , துப்புரவுத் தொழிலாளர்கள், பிற முன்னணி தொழிலாளர்கள், பாதுகாப்புப் படைகள், காவல்துறை மற்றும் பிற துணை ராணுவப் படையினருக்கும் முதல் கட்டத்தில் தடுப்பூசி போடப்படும். நமது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மற்றவர்களை விட செலவு குறைந்தவை.

மற்றும் நமது தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளன. 3 கோடி கொரோனா போர்வீரர்கள், முன்னணி தொழிலாளர்கள் முதல் கட்ட தடுப்பூசி போடுவதற்கான செலவுகளை மத்திய அரசு  ஏற்கும். தடுப்பூசி தொடர்பான வதந்திகள் பரவுவதை  தடுப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்; இதில் சமூக, மத குழுக்கள் ஈடுபட வேண்டும். கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தியா தடுப்பூசி ஒத்திகை  முடிந்துள்ளது, இது மிகப்பெரிய சாதனையாகும். கொரோனா தடுப்பூசிக்கு அரசியல்வாதிகள் முந்தக்கூடாது தங்களுக்கான முறை வரும்போது அரசியல்வாதிகள் தடுப்புசி போட்டுக்கொள்ள வேண்டும் என கூறினார்.

Tags : government ,Modi ,corona warriors , The federal government will bear the cost of vaccinating corona warriors and leading workers: Prime Minister Modi's speech
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...