×

சபரிமலையில் 14ல் மகரஜோதி தரிசனம்; கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை: தேவஸம்போர்டு திட்டவட்டம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. வரும் 14ம் தேதி பிரசித்திபெற்ற மகரவிளக்கு பூஜை, மகர ஜோதி தரிசனமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. வரலாற்று சிறப்புமிக்க எருமேலி ேபட்டை துள்ளல் உள்பட மகரவிளக்கு தொடர்பான முக்கிய நிகழ்வுகள் இன்று தொடங்குகின்றன. மகரவிளக்கு சிறப்பு பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரண பெட்டி ஊர்வலம் நாளை பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்படும். இது 14ம் தேதி மாலை 5.30க்கு சரங்குத்தி வந்தடையும். பின்னர் சன்னிதானம் வரும் திருவாபரண பெட்டியை தந்திரி மற்றும் மேல்சாந்தி பெற்று ஐயப்பனுக்கு அணிவித்து தீபாராதனை நடக்கும். இதையடுத்து ெபான்னம்பல மேட்டில் மகரஜோதி தெரியும்.

தற்போது தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் வரும் 19ம் தேதி வரை தரிசனம் செய்யலாம். 20ம் தேதி காலை 6 மணிக்கு பந்தள ராஜ குடும்ப பிரதிநிதியின் தரிசனத்துக்கு பிறகு நடை அடைக்கப்படும். திருவிதாங்கூர் தேவஸம்போர்டு தலைவர் என்.வாசு கூறியதாவது: சபரிமலை ஐயப்பன் ேகாயிலில் வரும் 14ம் தேதி மகரவிளக்கு தரிசனத்திற்காக, ஏற்கனவே முன்பதிவு செய்த 5,000 பக்தர்களுக்கு மட்டுமே சன்னிதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகரவிளக்கு தரிசனத்திற்காக புல்மேடு, பாஞ்சாலிமேடு, பருந்தும்பாறை ஆகிய இடங்களில் தங்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மகர ஜோதி தரிசனம் மற்றும் மகர விளக்கு பூஜை ெகாரோனா ெநறிமுறைகளை முழுமையாக பின்பற்றி நடத்தப்படும்.

ெகாரோனா நெறிமுறைகள், வரம்புகள் இருந்தபோதிலும் மண்டல, மகரவிளக்கு காலத்தில் பக்தர்களின் தரிசனம் குறைகள் ஏதும் இல்லாமல் பார்த்து கொள்ளப்பட்டது. தேவஸம் ஊழியர்கள், காவல்துறை, சுகாதாரம், மாவட்ட நிர்வாகம் மற்றும் பிற அரசுத்துறைகளின் கூட்டு முயற்சியின் விளைவாக நெருக்கடிகள் நீக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை (8ம் தேதி) நிலவரப்படி, ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 706 பக்தர்கள் மெய்நிகர் வரிசை (விர்ச்சுவல் கியூ) முறையில் தரிசனத்துக்கு வருகை தந்திருந்தனர். ேமலும் அன்ைறய தினம் வரை ₹14.11 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : darshan ,Maharajoti ,devotees ,Sabarimala ,Devaswom Board Scheme , Maharajoti darshan at Sabarimala on the 14th; No additional devotees allowed: Devaswom Board Scheme
× RELATED தர்ஷன், அஞ்சு குரியன் நடித்த எண்ட ஓமனே