×

ஸ்மித்தின் மோசமான செயல்...! டிம் பெயினுக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்..! சிட்னி டெஸ்டின் சுவாரசியமான அனுபவம்

சிட்னி: ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் தோற்ற பின்னரும், இந்தியா சிறப்பாக விளையாடி போட்டியை டிரா செய்தது. ஆனால், இந்திய அணி வீரர்கள் காயம் அடைந்தது சற்று கவலை அளிக்கும் விதமாக உள்ளது. மேலும் இந்த ஆட்டத்தில் நடந்த சில சுவாரசியமான செயல்கள்:

ஸ்மித்தின் மோசமான செயல்

வீரர்கள் களம் இறங்கியதும் மூன்று ஸ்டம்ப்களில் எதில் நின்று விளையாட வேண்டும் என்பதற்காக க்ரீஸ் கார்டு எடுப்பார்கள். எடுத்து அதில் அடையாளத்திற்கான ஒரு கோட்டை ஏற்படுத்துவார்கள். அப்போதுதான் எங்கு நின்று விளையாடுகிறோம் என்பது பேட்ஸ்மேன்களுக்கு தெரியும். முதல் செசனுக்கனா கூல்டிரிங்ஸ் இடைவேளையின்போது ரிஷப் பண்ட் குளிர்பானம் அருந்திவிட்டு வந்தார். அதற்குள் ஸ்டீவ் ஸ்மித், பேட்ஸ்மேன் இடத்திற்கு வந்து ரிஷப் பண்ட் ஆடுவது போன்று சைகை காட்டினார்.

அதன்பின் காலால் ரிஷப் பண்ட் ஏற்படுத்தி வைத்த க்ரீஸ் கார்டை காலால் சுரண்டி அழித்தார். பின்னர் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வரும்போது எடுத்து வைத்திருந்த க்ரீஸ் கார்டு அழிக்கப்பட்டிருந்ததை கண்டார். அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் புதிதாக க்ரீஸ் கார்டு எடுத்து விளையைாடினார். சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 97 ரன்னில் வெளியேறினார். ஸ்மித்தின் இந்த செயலை ரசிகர்கள் டுவிட்டரில் கண்டித்து வருகிறார்கள்.

டிம் பெயினுக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்

டிம் பெயின் கூறுகையில்,  ’காத்திருக்க முடியவில்லை. காபாவுக்கு (பிரிஸ்பென் மைதானத்தின் புனைப்பெயர்) வாருங்க... உங்களுடன் விளையாட மிகுந்த ஆவலாக உள்ளோம் அஸ்வின்’ என்றார்.

டிம் பெயினின் கருத்துக்கு உடனடியாக பதிலடி கொடுத்த அஸ்வின், ‘அதேபோல் தான் நீங்கள் இந்தியாவுக்கு வாருங்க... உங்களுடன் நாங்கள் விளையாட ஆவலாக உள்ளோம். அதுதான் உங்கள் கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.


கங்குலி புகழாரம்

புஜாரா, ரிஷப் பண்ட், அஸ்வின் ஆகியோர் இந்திய அணிக்கு முக்கியமானவர்கள் என்பதை உணர்வார்கள் என்று நம்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3-வது இடத்தில் களம் இறங்கி தரமான பந்து வீச்சை எப்போதும் எதிர்கொள்வது சாதாரண விஷயம் அல்ல.... கிட்டதட்ட 400 விக்கெட்டுகள் எளிமையாக கிடைக்கவில்லை.. இந்தியா சிறப்பாக எதிர்கொண்டது... தொடரை வெல்வதற்கான நேரம்’’ எனப்பதிவிட்டுள்ளார்.

Tags : Smith ,Aswin ,Tim Payne ,Sydney Test , Smith's worst act ...! Aswin retaliates against Tim Payne ..! Interesting experience of the Sydney Test
× RELATED மகாபாரதத்திலிருந்து தொடங்கும் கல்கி 2898ஏடி