×

மிரட்டும் பறவை காய்ச்சல் : மகாராஷ்டிராவில் பண்ணை கோழிகளை அழிக்க உத்தரவு

புனே:ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,   கேரளாவிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. 9வது மாநிலமாக டெல்லியில் கடந்த சில நாட்களாக 200க்கும் மேற்பட்ட காகங்கள் மற்றும் வாத்துகள் போன்ற பறவையினங்கள் இறந்துள்ளன. கடந்த 3 நாட்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டத்தில் முரும்பா கிராமத்தில் 800 கோழி குஞ்சுகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தன.  அவற்றின் ரத்த மாதிரிகளை மாவட்ட நிர்வாகம் தேசிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தது.

இதன் முடிவுகள் இன்று வெளிவந்தன.  அதில், பறவை காய்ச்சலால் அவை உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என பர்பானி மாவட்ட ஆட்சியர் தீபக் முக்லிகர் கூறியுள்ளார். இதனால், அந்த கிராமத்தில் ஒரு கி.மீ. சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கோழி பண்ணைகளில் உள்ள பறவைகளை அழிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.  10 கி.மீ. சுற்றளவில் கோழி விற்பனை மற்றும் கொள்முதல் ஆகியவற்றுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. கிராம மக்கள் அனைவருக்கும் வைரசால் ஏற்பட்ட தொற்று பற்றிய பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது என ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

Tags : Maharashtra , Bird flu, Maharashtra, Farm co
× RELATED என்கவுன்டரில் 4 நக்சல்கள் பலி