×

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு :இயற்கை பேரிடராக அறிவிப்பு

காஷ்மீர்:காஷ்மீரில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவை இயற்கைப் பேரிடராக துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரின் ெபரும்பாலான பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியவில்லை. அதனால், அம்மாநில துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வெளியிட்ட அறிவிப்பில், ‘பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்ய வேண்டும். கடும் பனிப்பொழிவால் பல்வேறு நிலைகளில் பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை அடிப்படையில் இந்த பனிப் பொழிவை இயற்கைப் பேரிடராக அறிவிக்கப்படுகிறது. பனிப்பொழிவால் பாதிக்கப்படும் மக்களுக்கு, ஜம்மு - காஷ்மீர் அரசின் நிவாரணம் மற்றும் நிதியுதவியை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.



Tags : Kashmir ,disaster , Kashmir, snowfall
× RELATED காஷ்மீரில் கடும் எதிர்ப்பால் பொது...