×

ஜெயலலிதா இல்லாமல் அதிமுக இந்த தேர்தலை சந்திக்கிறது.. எடப்பாடிக்கு இது சவாலான தேர்தல் குஷ்பு பேட்டி

திருச்சி: எடப்பாடிக்கு இது சவாலான தேர்தலாகவே அமையும் என்று பா.ஜ செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறினார்.திருச்சியில் நேற்று நடிகை குஷ்பு கூறியதாவது:ஜெயலலிதா இல்லாமல் அதிமுக இந்த தேர்தலை சந்திக்கிறது. அப்படியிருக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இது ஒரு புதிய சவாலான தேர்தல் ஆகவே அமையும். தேசிய கட்சிகளில் இருந்து மாநில கட்சிகள் வரை மிகப்பெரிய கட்சிகளாக இருக்கக்கூடிய பாஜகவும், காங்கிரசும், அதிமுகவும், திமுகவும் எந்தக் கட்சிகளும் சமூக வலைதளங்களால் உருவாக்கப்பட்டவை அல்ல. சமூகம் என்பது ஒரு வழி என்றார்.

முன்னதாக குஷ்பு தஞ்சையில் அளித்த பேட்டி:நாட்டிலேயே மிகப் பெரிய கட்சியாக பாஜக உள்ளது. கட்சிக்கு என்று ஒரு புரோட்டோகால் உள்ளது. அந்த விதி முறைப்படியே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தெரிவிப்போம். நான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போகிறேனா என்பது பற்றி எனக்கே தெரியாது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு முடிவு கட்ட ஒரு சட்டம் இயற்றும் வரை அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெற்று கொண்டுதான் இருக்கும் என்றார்.

Tags : AIADMK ,election ,Jayalalithaa ,Edappadi , Jayalalithaa, AIADMK, Edappadi, Election
× RELATED நட்டாற்றில் நிற்கும் ஒத்த சீட்டு...