×

வேகமாக பரவும் உருமாறிய கொரோனா...! இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 96 ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96-ஆக உயந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இருந்து வந்த மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ், சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ், 70 சதவீதம் அதிவேகமாக பரவக்கூடியது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் அலை தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் புதிய வகை தொற்று பரவியுள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களையும் கண்டறிந்து சோதனை மேற்கொண்டதில் சிலர் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களை தனித்தனி அறையில் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாநில அரசுகளால் தனித்தனி அறை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags : Federal Health Department ,India , The fast-spreading transformed corona ...! Vulnerability rises to 96 in India: Federal Health Department
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...