×

ஒட்டன்சத்திரம் அருகே பொங்கலுக்கு தயாராகும் மண் பானைகள்-தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே, சுற்றுச்சூழலை மாசுபடுத்ததாத வகையில் பொங்கல் திருநாளுக்கு மண் பானைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சி ஊராட்சியை சேர்ந்த சாமியார்புதூரில் தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு புது மண்சட்டி, கரும்பு மற்றும் மஞ்சள் கொத்துடன் சக்கரை பொங்கல் வைத்து குடும்பத்துடன் பொங்கலிட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு கொடுத்து கொண்டாடும் பல்லாண்டுப் பாரம்பரியம் இன்று வரை தொடர்கிறது.

இம்மாதம் ஜன.14ல் பொங்கல் பண்டிகை தொடங்கி 18ம் தேதி வரை பல்வேறு விழாக்கள் நடைபெற உள்ளன. பொங்கல் திருநாளுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் சாமியார்புதூரில் 15க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பொங்கல் பானைகள் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குளங்களில் உள்ள களிமண் மற்றும் வண்டல் மண்ணை பிசைந்து ஒரு நாட்களுக்கு முன்பு ஊறவைத்து காலையில் மண் பானை தயாரிப்பில் ஈடுபடுவர். பிசைந்த மண்னை சக்கரத்தில் இட்டு பல்வேறு உருவங்களில் பொங்கல் பானைகளில் தயாரிப்பார்.

இப்பானைகளில் அடி பகுதி ஓட்டையாக இருக்கும். சட்டிகள் காய்ந்த பின்பு அடிப்பகுதி ஓட்டையில் களிமண், வண்டல் மண் கலவையிட்டு முழுமையான அடைப்பர். பின்பு பானைகளை நெருப்பு சூளையில் இட்டு, அதன்பின் பல்வேறு வண்ணங்களை பானைகளுக்கு பூசுவர். இப்பானைகளை பயன்படுத்துவதன் மூலம் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ மற்றும் சுற்றுச்சூழலுக்கோ எவ்வித மாசும் ஏற்படாது என கூறுகின்றனர். இவ்வாறு தயாரிக்கும் பொங்கல் பானைகளை திண்டுக்கல், மூலனூர், பழனி, ஒட்டன்சத்திரம், மார்க்கம்பட்டி, இடையகோட்டை ஆகிய ஊர்களைச் சேர்ந்த மொத்த வியபாரிகள் கொள்முதல் செய்து மதுரை, தேனி, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வர்.  

இது குறித்து மண்பாணை தொழிலாளர்கள் கூறுகையில், ‘கடந்த 50 ஆண்டுகளாக பொங்கல் பானை, கார்த்திகை விளக்கு, தண்ணீர் பானை, குழம்புச்சட்டி உட்பட பல்வேறு மண்பாண்டங்களை தயாரித்து வருகிறோம். கிராமப்புறங்களில் ஏராளமான இன்றும் மண்பாண்டங்களில் உணவு சமைத்து வருகின்றனர். தற்போது பல உணவகங்களில் மண்பானை சமையல் என்ற பெயரில் உணவுகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதால் தற்பொழுது இம்மண்பாணை பொருட்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது’ என்றனர்.


Tags : Pongal ,Ottansathram ,towns ,Tamil Nadu , Ottansathram: Near Ottansathram, the work of making earthen pots for the Pongal festival is in full swing without polluting the environment.
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா